மறந்துடாதீங்க.... இன்று முதல் 10,11ம் வகுப்புகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்...!

 
தற்காலிக சான்றிதழ்

தமிழகத்தில் மே 19ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் தமிழகம்  91.39 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. 23,971 பேர் தேர்ச்சி பெறவில்லை.10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு ஜூன் மாதத்தில் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 6 – 20 வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை  www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in இணையதளங்களில் தெரிந்து  கொள்ளலாம்.அத்துடன்  மாணவர்களின் கைபேசி எண்களுக்கு குறுந்செய்திகள் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மதிப்பெண்

கடந்த ஆண்டு 90.7% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், நடப்பாண்டில்  மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%.  தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்  முதலிடத்திலும், சிவகங்கை மாவட்டம் 2ம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 3 ம் இடத்தையும் பிடித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.  இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

துணைத்தேர்வு அட்டவணை

ஜூன் 27 – மொழிப்பாடம். 
ஜூன் 28 – ஆங்கிலம்
ஜூன் 30 – கணிதம்
ஜூலை 1 – விருப்பத்தேர்வு மொழிபாடம்
ஜூலை 3 – அறிவியல்
ஜூலை 4 – சமூக அறிவியல்

தேர்வு

10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு மே 24 முதல் 27ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு  மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்லை 7.70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.

மே 19ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தினத்திலேயே பிற்பகல் தேர்வு முடிவுகள் வெளியாகின. மொத்தம் தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவியர்களில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவீதம் 90.93. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 3,91,968. மாணவர்களின் எண்ணிக்கை 3,14,444. மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.36. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.99. மாணவர்களை விட மாணவியர்கள் 7.37 % அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web