நெகிழ்ச்சி.. உயிரிழந்த மகளுக்கு ”பூப்புனித நீராட்டு விழா”!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணன் - ராக்கு தம்பதியினர். இவர்களுக்கு பாண்டிச் செல்வி என்ற ஒரே மகள் இருந்தார். மிகச் சிறு வயதில் இருந்தே பாண்டிச்செல்விக்கு தன்னை அலங்காரம் செய்து கொள்வதில் அலாதிப் பிரியம். தினமும் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்ததும் தனக்கு தானே சேலை கட்டி, பூ வைத்து அலங்காரம் செய்து கொள்வார். உறவினர் வீட்டு விசேஷங்களில் கூட மிகுந்த அலங்காரத்துடன் வலம் வந்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்லும் போது தாய் ராக்குவிடம் தான் பூப்பெய்தும் போது இது போன்று பிரம்மாண்டமாக விசேஷம் நடத்த வேண்டும் என சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரே பெண் என்பதால் அவர் சொல்வதற்கு எல்லாம் சரியென கூறிக்கொண்டே இருந்தார் அவருடைய தாய் ராக்கு. பிறந்த நாள் உட்பட பல விசேஷங்களை பிரம்மாண்டமாக கொண்டாடினர்.
யார் கண்பட்டதோ தெரியவில்லை 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவால் பாண்டிச்செல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தன்னுடைய ஒரே மகள் உயிரிழந்ததை தாயால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மகள் இன்னும் தன்னுடன் வாழ்வதாகவே நினைத்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார் அவருடைய தாய் ராக்கு. பாண்டிச்செல்வி உயிரோடு இருந்திருந்தாள் 14 வயது இருந்திருக்கும் . இந்நேரத்தில் அவர் பூப்பெய்து இருப்பார் என எண்ணி அவருக்கு பூப்புனித நீராட்டு விழா செய்ய திட்டமிட்டனர். இதற்காக உறவினர்கள் அனைவரையும் அழைத்து பூப்புனித நீராட்டு விழாக் கொண்டாட நினைத்தனர். மகளின் பூப்புனித நீராட்டு விழாவை வெகு விமரிசையாக நடத்தினார். உறவினர்கள் அனைவரையும் பத்திரிக்கை வைத்து அழைத்து தனியார் கல்யாண மண்டபத்தில் மகளை போன்றே கட்அவுட் செய்து அதற்கு பட்டுச் சேலை, நகை, மாலை அணிவித்து விழாவை நடத்தினர்.
அங்கு மகளின் காலடியில் அவர் பயன்படுத்திய கொலுசு உட்பட உறவினர்கள் கொண்டு வந்த பட்டுச் சேலை, நகை, சீர் வரிசை அனைத்தும் பரப்பி வைக்கப்பட்டன. விசேஷங்களின் போது சம்பந்தப்பட்டவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்று மகளின் கட்அவுட் உடன் சேர்ந்து உறவினர்கள், ராக்கு, அவரது கணவர் பாலகிருஷ்ணன் போட்டோ எடுத்து கொண்டனர். ராக்குவிற்கும் அவரது மகள் பாண்டிச்செல்விக்கும் 'என் பொம்முகுட்டி அம்மாவிற்கு' என்ற திரைப்படத்தில் நடிகை சுஹாசினி மகளை பறிகொடுத்த பின் பாடும் 'கண்ணே நவமணியே உன்னை காணாது நெஞ்சு' என்ற பாடல் ரொம்ப பிடிக்குமாம், அடிக்கடி தாயும் மகளும் அந்த பாடலை பாடுவது வழக்கமாக இருந்தது. தினசரி இரவிலும் அந்த பாடலை பாடிய பின்தான் பாண்டிச்செல்வி தூங்குவாராம், அந்த பாடலே வாழ்க்கையில் உண்மையாகி போனதுதான் சோகம். பூப்புனித விழாவில் தாயார் ராக்கு அந்த பாடலை பாடியது உறவினர்களிடம் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!