அடி தூள்... அமெரிக்காவில் தீபாவளிக்கு பொதுவிடுமுறை.. உற்சாகக் கொண்டாட்டம்!!

 
தீபாவளி

நவம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுக்க தீபாவளி பண்டிகை கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் ஒரே ஒரு நாள் பண்டிகையாக கொண்டாடப்படும் தீபாவளி   வடமாநிலங்களில் மட்டும் 5 நாள் விழாவாக கொண்டாடபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.தீபாவளி இந்தியர்கள்  வாழும் இடங்களில் , ஊர்களில் நாடுகளில் எல்லாம் சிறப்பித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில்   நியூயார்க் மாகாணத்தில் அம்மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் நேற்று  நவம்பர் 14ம் தேதி செவ்வாய்க்கிழமை தீபாவளி குறித்த சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  

தீபாவளி

அதன்படி  இனி நியூயார்க் மாகாணத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு தீபாவளி தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை விடப்படும் என கூறியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்க மாணவர்கள் உட்பட அனைவரும் மற்ற நாட்டு கலாச்சாரத்தையும், கொண்டாட்டங்களையும் அறிந்து கொள்வர் என குறிப்பிட்டுள்ளார்.  பள்ளி மாணவர்களிடையே பன்முகத்தன்மையை அங்கீகரித்து கொண்டாட இப்படி ஒரு முக்கியமான நடவடிக்கையை நாங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.  

பட்டாசு

மேலும் வாழ்வில் இருள் நீங்கி, ஒளியின் கொண்டாட்டமாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.  அதனால்தான் இன்றிரவு  நவம்பர் 14ம் தேதி செவ்வாய் கிழமை  அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நாம் அனைவரும் தீபாவளியைக் கொண்டாடக் கூடியிருக்கும் இதே நேரத்தில்  தீபாவளியை நியூயார்க் நகரப் பொதுப் பள்ளி விடுமுறையாக மாற்றும் வரலாற்றுச் சட்டத்தில் கையெழுத்திடுவதை பெருமிதமாக உணர்கிறேன் என  நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web