பொதுமக்கள் ஷாக்... தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது!

 
மின் கட்டணம்

தமிழகத்தில் இன்று ஜூலை 1ம் தேதி முதல், பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3.16% புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

முன்னதாக தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில்,  அமைச்சர் சிவசங்கர் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மின் கட்டண உயர்வு

இது குறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெரிய தொழில் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு 3.16%-க்கு மிகாமல் மின்கட்டணம்

உயர்த்தப்படுகிறது. வீட்டு மின் இணைப்புகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களுக்கு எந்தவித கட்டண உயர்வும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டணம்

வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும் அதனை அரசே ஏற்கும். அதே போல் சிறு, குறு நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையும் அரசே ஏற்கும். புதிய மின் கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது