இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

 
தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!

தமிழகத்தில்   தேர்தல் ஆணையத்தால் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் ஆகியவைகளை மேற்கொள்ளலாம். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெறுவது. பின்னர் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆதார் வாக்காளர் அட்டை


 அடுத்த ஆண்டு  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள  நிலையில், இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட அளவிலான பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுகின்றனர். இதனைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும்  உரிய ஆவணங்களுடன் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
 தமிழகத்தில் 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவருமே வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக்கொள்ள  விண்ணப்பிக்கலாம்.  வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டிசம்பர் 9ம் தேதி இறுதி வாக்களர் பட்டியல் வெளியீடு!! நகர்ப்புற,  உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்!

மேலும், நவம்பர் 4, 5, 18, 19ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.  பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம் என அனைத்து  பணிகளும்  மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள்   டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெற உள்ளன.  இதன் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு  ஜனவரி 5-ம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web