உஷார்.. பப்ஸில் கரப்பான் பூச்சி... பேக்கரிக்கு ரூ.10,000 அபராதம்!

 
பப்ஸில் கரப்பான் பூச்சி

சிவகாசியில் உள்ள ஒரு பேக்கரியில் வாடிக்கையாளா் வாங்கிய பஃப்ஸில் கரப்பான் பூச்சி இருந்ததால், அந்த பேக்கரிக்கு மாநகராட்சி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.

சிவகாசி-விருதுநகா் புறவழிச்சாலையில் ராமானுஜம் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி உள்ளது. இந்த பேக்கரியில் வாடிக்கையாளா் ஒருவா் பஃப்ஸ் வாங்கி சாப்பிட பஃப்ஸை பிரித்துள்ளார். அப்போது அந்த  பஃப்ஸில் அதில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்தநிலையில் இருந்துள்ளது.

இதையடுத்து பேக்கரியில் அவருக்கு வேறு பஃப்ஸ் வழங்கப்பட்டது. பின்னா் வாடிக்கையாளா் மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தார். 

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் ராஜாமுத்து, பேக்கிரியை ஆய்வு செய்து, அதில் உள்ள குறைபாடுகளுக்கு குறிப்பாணை வழங்கி, ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்தாா்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web