+2 தேர்வில் மதிப்பெண் குறைவு.. புதுவை மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
மேனகா

தமிழகத்திலும், புதுவையிலும் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மதிப்பெண் குறைந்ததால் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரியை அடுத்துள்ள ஓதியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால்.

தூக்கிட்டு தற்கொலை

இவரது மகள் மேனகா (17). தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்த மேனகா, நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், குறைந்த மதிப்பெண்கள் (334) எடுத்திருந்தார். தேர்ச்சியடைந்தும் மதிப்பெண்கள் குறைந்த காரணத்தினால், சோகத்துடன் இருந்து வந்த மேனகா, நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வில்லியனூர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மாணவி மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கையை முடிவு செய்யும் காரணிகள் அல்ல எனவும் மாணவர்கள் இதுபோன்ற தவறான சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வு அல்ல என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web