மீம் வீடியோ... பிரதமர் மேடையில் குத்தாட்டம் .... மோடி மகிழ்ச்சி!

 
மோடி

 இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் காரணமாக அரசியல் காட்சிகள் விறுவிறுப்புடன் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி  தன்னை வைத்து உருவாக்கிய மீம் வீடியோவைப் பகிர்ந்து, நன்றாக இருப்பதாகப் பாராட்டி இருக்கிறார். அந்த வீடியோவில் பிரதமர்  மோடி ஒரு மேடையில் நடந்து வந்து நடனமாடுகிறார். இந்த  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சில நாட்களுக்கு முன்  இதேபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி டிரெண்டிங்கில் இருந்தது.  ஆனால் மம்தா பானர்ஜி அந்த வீடியோவைப் பதிவிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


ஆனால், பிரதமர் மோடி தன்னுடைய  ஸ்பூஃப் வீடியோவை தானே பதிவிட்டு  அதன் கிரியேட்டிவிட்டிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி   "இந்த வீடியோவைப் பதிவிடுவதால் 'சர்வாதிகாரி'  என்னை கைது செய்யப் போவதில்லை என்று எனக்குத் தெரியும்" எனவும் குறிப்பிட்டிருந்தார். 
இந்தப் பதிவை ரீட்வீட் செய்த மோடி, "உங்கள் அனைவரையும் போலவே நானும் நான் நடனமாடுவதைப் பார்த்து ரசித்தேன். தேர்தல் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது இதுபோன்ற படைப்பாற்றல்   உண்மையில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது" எனக் கூறியுள்ளார்.

வெற்றி பெறுவாரா மம்தா பானர்ஜி? வெற்றி பெற்றால் மட்டுமே மம்தா பானர்ஜி முதலமைச்சர்..


இந்த வீடியோவில்  அமெரிக்க ராப் இசை பாடகர் லில் யாச்சியின் வீடியோவை வைத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம்   எடிட் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜூன் 21, 2022 அன்று யூடியூப்பில் வெளியான  இந்த வீடியோவில், லில் யாச்சிக்குப் பதிலாக ஹிட்லர் முதலிய பிரபலமான நபர்களை வைத்து மீட் வீடியோவை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இதேபோன்ற ஸ்பூஃப் வீடியோவை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டவர்கள் மீது  சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆனாலும்  அந்த வீடியோ சமூக வலைதளங்களில் முன்னைவிட வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web