”நாய்க்குட்டி யோகா” விற்கு தடை... இத்தாலி அரசு அதிரடி!
இத்தாலியில் யோகா செண்டர்களில் நாய்களை பயன்படுத்தி யோகா செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பப்பி யோகா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த யோகாவில் மனிதர்கள் யோகா செய்யும் போது நாய்க்குட்டிகள் அங்கும் இங்கும் சுற்றி திரியும். மனிதர்கள் மேல் தாவி ஏறி அவர்களை உற்சாகப்படுத்தும். இந்த யோகா முறையை இத்தாலி தடை விதித்துள்ளது. இது குறித்து இத்தாலியின் சுகாதார அமைச்சகம் விலங்குகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. இதனால் யோகா செய்பவர்கள் மற்றும் நாய்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கை ஏப்ரல் 29ம் தேதி வெளியிடப்பட்டது.

நாய் வளர்ப்பவர்களிடம் இருந்து நாய்க்குட்டிகளை வாங்கி வகுப்புகளுக்கு பயன்படுத்துவது குறித்து அமைச்சகத்துக்கு தகவல்கள் கிடைத்ததாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்களைப் பயன்படுத்தும் சிகிச்சை நலனுக்கு உதவும் என்பதால், முழு வளர்ச்சியடைந்த நாய்களையே இதற்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

நாய்க்குட்டி யோகா என்பது யோகா பயிற்சியின் போது நாய்கள் யோகா பயிற்சியாளர்களிடையே சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. சில யோகா நிலைகளில் நாய்கள் யோகா பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற யோகா நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான ஆய்வுகளை மேற்கொள்ளவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மனிதர்களின் மன உளைச்சலைத் தவிர்ப்பதற்காக விலங்குகளை சித்திரவதை செய்ய இந்த முறை பயன்படுத்தப்படுவதாக விலங்கு உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த முடிவிற்கு விலங்கு உரிமை ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
