புரட்டாசி துவங்கிடுச்சு... தமிழகத்தில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்!

 
மீன் இறைச்சி தூத்துக்குடி துறைமுகம்

இன்று புரட்டாசி மாதம் துவங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் முக்கிய சந்தைகளில் எப்போதும் அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படும் இறைச்சி கடைகளும், மீன் மார்க்கெட்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

புரட்டாசி மாதத்தின் முதல் நாளான இன்று முதல் அசைவ ப்ரியர்கள் அடுத்த ஒரு மாத காலத்திற்கு சைவ உணவு பழக்கத்திற்கு மாறியதால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

இறைச்சி மட்டன் சிக்கன்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது ஐதீகம். பெருமாளை வழிபடும் பக்தர்கள் மட்டுமல்லாது, பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து, விரதம் இருப்பவர்கள் சைவ வகை உணவுகளை இந்த ஒரு மாதமும் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இறைச்சி மட்டன் சிக்கன்

நேற்று ஐப்பசி மாதத்தின் கடைசி தினம் என்பதால் அசைவ உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று புரட்டாசி துவங்குவதால் தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. திருப்பதியில், பெருமாள் தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணி நேரம் வரையில் வரிசையில் காத்திருந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?