பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனி வழிபாடு... திரளான பக்தர்கள் தரிசனம்!
தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, திரளான பக்தர்கள் தரிசனம செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதமிருந்து, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஆலயங்களிலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காலையில் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தார். இன்று முதல் சனிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கும் 7 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
