குட்நியூஸ்... ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம்பருப்பு கையிருப்பு!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக பாமாயில், பருப்பு கையிருப்பு இல்லை என திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதனால் நுகர்வோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திற்கு வழங்குவதற்காக ரூ419 கோடி மதிப்பீட்டில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20,000 டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கியிருப்பதாக உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
