பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்!

 
பூரி

பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியான நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கடந்த வெள்ளி கிழமை தொடங்கி நடந்து வருகிறது. ரத யாத்திரையின் 2-வது நாளான நேற்று ரதங்களில் இருந்த 3 சாமிகளுக்கான திரைகளை அகற்றுவதற்காக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, இன்று அதிகாலை 4 மணியளவில் குண்டிசா கோவில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் காயம் அடைந்தனர்.

பூரி ஜெகநாதர் ரத யாத்திரை! இவர்களுக்கு அனுமதி கிடையாது!

இந்த விவகாரத்தில் 2 காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து முதல்-மந்திரி மோகன் சரண் மஜி உத்தரவிட்டு உள்ளார். மேலும், பூரி கலெக்டர் சித்தார்த் சங்கர் மற்றும் எஸ்.பி. வினீத் அகர்வால் ஆகியோரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல் மந்திரி மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது