தள்ளு.. தள்ளு.. பழுதாகி நின்ற பள்ளி வாகனத்தை மாணவர்கள் தள்ளிய அவலம்.. வீடியோ வைரல்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த குறிஞ்சிநகர் பகுதியில் செம்போர்ட் ப்பூட்ரிஷ்டிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதன் காரணமாக பள்ளியில் வாகனம் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றி செல்லும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
திருப்பத்தூர்: பழுதாகி நின்ற தனியார் பள்ளி வாகனம்.. பள்ளி மாணவர்களை தள்ள வைத்த அவலம்! pic.twitter.com/x4mCEI9nJd
— Dina Maalai (@DinaMaalai) July 31, 2024
இந்த நிலையில் இன்று திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி வாகனம் பழுதாகி நின்றது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் இறக்கி பள்ளி வாகனத்தை தள்ளச் செய்த சம்பவம் நிகழ்ந்தேறியது. அதனை அருகே இருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவை செய்துள்ளார். அதன் வீடியோ தற்போது வேகமாக வைரல் ஆகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
