திமுக கூட்டத்தில் தள்ளுமுள்ளு.. பணம் வாங்குவதில் போட்டியால் கால்வாய்க்குள் விழுந்த பெண்கள்!

 
பெண்கள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில், தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார், தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரமாண்டமான முறையில் பொதுக்கூட்டமாக நடைபெற்ற திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்துக்கு அதிகளவில் மக்கள் வரவழைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்திருந்தனர். 

பெண்கள்

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கைத்தறி நெசவாளர்களாக இருந்த நாம் தற்போது விசைத்தறி நெசவாளர்களாக இருக்கிறோம். தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் நெசவாளர்களுக்கு 750 யூனிட்டாக இருந்த இலவச மின்சாரத்தை ஆயிரம் யூனிட்டாக உயர்த்தி வழங்கப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு அடுத்தபடியாக நெசவாளர்கள்தான் வறுமையில் இருக்கின்றனர். இதை அறிந்து தான் முதல்வர் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறார், என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் தலைவர்கள் அனைவரும் பேசினர். கூட்டத்தின் நிறைவடைந்த நிலையில், மேடையின் முன்புறம் வைத்து டோக்கன் முறையில் பணம் பட்டுவாடா நடைபெற்றது. அதாவது கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. சிறிதுநேரத்திலேயே, பணம் பெறுவதற்கு போட்டாப்போட்டி ஏற்பட்டு அப்பகுதியே பரபரப்பானது.

பெண்கள்

இதனால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் தள்ளுமுள்ளு உருவாகி தெருவோரம் இருந்த கழிவுநீர் கால்வாயில் இரு பெண்கள் விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் மீட்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்துக்கு பிறகு நிலைமை சரியானது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web