பெரும் சோகம்... ’ புஷ்பா 2’ நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச்சாவு!
ஹைதராபாத் மாநிலத்தில் 'புஷ்பா 2' திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோ முதல் காட்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனுக்கு வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவதற்கு முன்தினம் டிசம்பர் 4ம் தேதி திரையிடப்பட்டது.

படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வந்ததால் அங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.அவருடன் இரவு 9.30 மணிக்கு அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர். இதை அறிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி சரிந்தனர். இதில், 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அச்சிறுவனுக்கு விட்டுவிட்டு காய்ச்சல் வருவதாகவும், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அச்சிறுவன் மூளைச்சாவு அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 14 நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கூட்ட நெரிசலில் சிக்கி தாய் உயிரிழந்த நிலையில் தற்போது மகனும் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
