‘புஷ்பா 2’ உயிரிழந்த ரசிகை குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி... படக்குழு அறிவிப்பு!

 
அல்லு அர்ஜுன்

புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவியை புஷ்பா 2 படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான நடிகர் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், படத்தின் சிறப்பு காட்சிக்காக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகனும் பாதிக்கப்பட்டு தற்போது கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அல்லு அர்ஜூன்

இதனிடையே பெண்ணின் மரணம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீதும், திரையரங்கு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அல்லு அர்ஜுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இன்று ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனுக்கு தியேட்டருக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பின்னும் சென்றுள்ளார். இதனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி அந்த பெண் உயிரிழந்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். பெண்ணின் மகனும் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, உயிரிழந்த பெண்ணின் மகனின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி அல்லு அர்ஜுன் ரூ.1 கோடியும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தலா ரூ.50 லட்சமும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சிறுவனின் உடல்நிலை குறித்து பேசிய அல்லு அரவிந்த், சிறுவன் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு வென்டிலேட்டர் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web