அப்படி போடு... 415 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு ‘டுடேஸ் சாணக்கியா’ கணிப்பு!

 
அப்படி போடு... 415 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு ‘டுடேஸ் சாணக்கியா’ கணிப்பு!

நாளை வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ள நிலையில், 415 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக டுடேஸ் சாணக்கிய கணித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, பாஜக 300-314 இடங்கள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-364 இடங்கள், காங்கிரஸ் 55-64 இடங்கள், அந்த கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 95-104 இடங்களை கைப்பற்றும் என்று ‘டுடேஸ் சாணக்கியா’ ஊடக நிறுவனம் துல்லியமாக கணித்து கூறியது.

அப்படி போடு... 415 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு ‘டுடேஸ் சாணக்கியா’ கணிப்பு!


இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலையொட்டி டுடேஸ் சாணக்கியா நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட கருத்துக் கணிப்பில், ‘பாஜக 335 - 350 இடங்கள், பாஜக கூட்டணி 400 - 415 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸுக்கு 50 - 61, இண்டியா கூட்டணிக்கு 107 - 118 இடங்கள் கிடைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு 29-34 இடங்கள், பாஜக கூட்டணிக்கு 10-14 இடங்கள், அதிமுக கூட்டணிக்கு 0-2 இடம் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web