பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைத்த புதின்... உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரிப்பு!
ரஷ்யா உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமரசம் செய்து போரை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் உக்ரைன் அதிபரை பேச்சுவார்தைக்கு ரஷியா வருமாறு அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்து விட்டதாக தெரிகிறது. போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றல் ரஷ்யா மீது வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

ஆகஸ்ட் 17ம் தேதி அலாஸ்க்காவில் புதினை சந்தித்து பேசிய ட்ரம்ப், கிரிமியா உட்பட ரஷ்யா கைப்பற்றிய பகுதிகள் மீண்டும் உக்ரைனுக்கு வழங்கப்படாது என அறிவித்தார். ஜெலன்ஸ்கி உடனான பேச்சு வார்த்தைக்கு புதின் மேலும் பல நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது. ஷாங்காய் ஒத்தழைப்பு மாநாடு மற்றும் சீனா ராணுவத்தின் 2 வது உலக போர் வெற்றிவிழாவில் பங்கேற்க சீனா சென்ற புதின், தனது பயணத்தின் முடிவில் பீஜிங்கில் இது குறித்து கூறினார்.

அதில் ஜெலன்ஸ்கி மாஸ்கோ வந்தால் அவரை சந்திக்க தயாராக இருப்பதாகவும், உக்ரைன் விவகாரத்தில் சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் போர் தொடரும் எனவும் திட்டவட்டமாக அறிவித்தார். இது குறித்து உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா ரஷ்யாவின் அறிவிப்பு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
