ஸ்கூட்டிக்குள் மலைப்பாம்பு... பகீர் வீடியோ!
கேரளாவில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மழைக்காலம் தொடங்கிவிட்டது பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துவிடும். அவை சில சமயங்களில் நாம் அணியும் ஷூக்குள், பைக் ஹெட்லைட் டூம்கள் மற்றும் ஹெல்மெட் இவைகளுக்குள் புகுந்துவிடும். அப்படி தான் கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மழை பெய்துகொண்டு இருந்த சமயத்தில் ஒருவருடைய ஸ்கூட்டியில் பாம்பு ஏறிப்படுத்துக் கொண்டது.
இதனை ரெக்கார்ட் செய்ய தொலைபேசியில் வீடியோவை ஆன் செய்து கொண்டார். பெரிய நீளமான குச்சி ஒன்றை எடுத்து கொண்டு ஸ்கூட்டியின் பின்புற சீட்டை அப்படியே தூக்கினார். பெட்ரோல் டேங்கில் மலைப்பாம்பு சுருண்டு கிடந்தது. அருகில் இருந்தவர்கள் எவ்வளவு பெருசு என பதட்டமும் அதிர்ச்சியும் கலந்து பார்த்தனர். பாம்பும் பதட்டத்துடன் வெளியே ஓடிவிடும் என நினைத்த நிலையில், பாம்பு நன்றாக சுருண்டு படுத்துக் கொண்டது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
அவர் வெளியீட்டு இருக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் வணக்கம் டா மாப்ள என கமெண்ட் தெரிவித்துள்ளனர். விரியன் பாம்பின் குழந்தை அல்ல பாதுகாப்பாக இருங்கள் எனவும் பலவகையான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!