மனைவியுடனும் தகராறு... கள்ளக்காதலியும் சண்டைப் போடுறா... விரக்தியில் இளைஞர் தற்கொலை!

 
பலாத்காரம் காதல் கள்ளக்காதல்
மனைவியுடன் தகராறு என்று கள்ளக்காதலியின் வீட்டிற்குச் சென்றால், கள்ளக்காதலியும் தகராறு செய்கிறாள். இந்நிலையில், கள்ளக்காதலியுடன் வாக்குவாதம் முற்றியதில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் சூர்யா (வயது 27). கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். பண்ருட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் சூர்யாவுக்கு பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று சூர்யா இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கும் அந்த பெண்ணுக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த சூர்யா அந்த பெண் கண்முன்னே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த பண்ருட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web