வாக்கு இயந்திர முறைகேடு குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த குரேஷி வலியுறுத்தல்!

 
ராகுல்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி. இவர், வாக்கு இயந்திரங்களில்  முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சிப்பதை விட, இந்திய தேர்தல் ஆணையம்  உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

தேர்தல்

இது குறித்து அவர்  ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலை “கோபமானது, அவதூறானது மற்றும் தாக்குதலானது” என சாடினார். “ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக   லட்சக்கணக்கான மக்களின் கருத்துகளை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவரை இப்படி விமர்சிக்கக் கூடாது. குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது,” என வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி, கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 போலி வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும்,  பாஜகவுடன் தேர்தல் ஆணையம் சதித்திட்டம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  இதற்கு ஆணையம் அஃபிடவிட் கோரியது தவறு என்று குரேஷி விமர்சித்தார்.

தேர்தல் ஆணையம்

மேலும் “இந்த குற்றச்சாட்டுகளை ஆழமாக விசாரிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ‘பலவீனர்கள்’ என்பதால், அவர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும், அதற்கு எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் அவசியம்,” என வாதிட்டுள்ளார். “விசாரணையே உண்மையை வெளிப்படுத்தும்; குற்றச்சாட்டுகளை நிராகரிப்பது மக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?