ரா... ரா.. ராமையா.. முடிவுக்கு வந்தது முதல்வர் பஞ்சாயத்து... சறுக்கியதா பாஜக... பிரஷாந்த் கிஷோர் கருத்து!

 
பிரசாந்த் கிஷோர்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் தனிப் பெரும்பான்மையாக வென்று ஆட்சியை பிடித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு வார காலம் ஆகப் போகிறது. இன்னும் ஆட்சியை அமைக்க முடியவில்லை. அதற்கு காரணம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இருப்பினும் இரு ஜாம்பவான்களுக்கு இடையே நடக்கும் நீயா நானா போட்டி. ஆனால் தலைமையோ நீ பாதி நான் பாதி கண்ணே எனக் கூற கண்ணை கசக்கி வெளியேறி விட்டாராம் சிவக்குமார்.

சரி சரி அத விடுங்க இன்னைக்கு எப்படியும் அறிவிப்பு வந்து விடும். 

கர்நாடகா  தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா பிரபல தேர்தல் வியூக நிபுணர், பிரசாந்த் கிஷோர், பீகார் தலைநகர் பாட்னாவில் என்ன சொல்லியிருக்கிறார் அவரது கருத்து என்ன?

சிவக்குமார்

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, காங்கிரசுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். ஆனால், இந்த முடிவு அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக கருத முடியாது. கருதவும் கூடாது.

2013ல் கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. ஆனால், அடுத்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. 2018ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கட்சி உடைந்தது. காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி அமைந்தது. பதவியேற்பு விழாவில் எதிர் கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

பிரசாந்த் கிஷோர்

2018 இறுதியில் நடந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், அடுத்த ஆறு மாதத்துக்குள் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான். சட்டீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் 'வாஷ் அவுட்' தோல்வியை அடைந்தது. அதுபோல், 2012ல், உபி. சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சி, 2014 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

அதனால், சட்டசபை தேர்தல் முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோடியாக கருத முடியாது என கருத்துக் கூறியிருக்கிறார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web