சோனியா, ராகுல் காந்தி வாக்குப்பதிவு.. வைரல் வீடியோ!

 
ராகுல் சோனியா

 இந்தியா  முழுவதும்  இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மே 25ம் தேதி  டெல்லி, அரியானா, பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

இன்றைய தேர்தலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் டெல்லியில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

 இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, அவரது தாய் சோனியா காந்தி  இருவரும் டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.   வாக்குச்சாவடிக்கு வெளியில் வந்த இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர் . அதே போல் இன்று ஒடிசா மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் இன்று தனது வாக்கினை செலுத்தினார். அதன்பின் பேசிய அவர், இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வமுடன் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!