சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்பு!

 
சி பி ராதாகிருஷ்ணன்


இந்தியாவின் 15 வது  குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.  குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சி.பி.ராதாகிருஷ்ணன்
இந்த விழாவில், பிரதமர் மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் ஜகதீப் தன்கர், வெங்கையா நாயுடு, முகமது ஹமீத் அன்சாரி உட்பட பல  மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.  குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், தனது பதவியை  ஜூலை 21ம் தேதி ராஜினாமா செய்திருந்தார்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

இதனைத்  தொடா்ந்து, அப்பதவிக்கு செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெற்றது. இந்த  தோ்தலில் பாஜக தலைமையில்  மகாராஷ்டிர ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிா்க்கட்சிகளின்  சாா்பில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சுதா்சன் ரெட்டியும் போட்டியிட்டனா். இதில், சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?