ராகுலின் காதல்.. கல்யாணம்? .... சிங்கிளாய் நிக்க காரணமே இதுதான்!

 
ராகுல்

 நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மோடி 3 வது முறையாக பிரதமராக கூட்டணி ஆட்சி அமைக்கிறார். கடந்த 2 முறை  தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த மோடி, இம்முறை பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் தான் இந்த கூட்டணி தத்துவம்.  மோடியின்  இந்த நிலைமைக்கு  காரணமே ராகுல் காந்தி தான்.   நடந்து முடிந்த  தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரலி 2 தொகுதிகளிலும் ராகுல் அமோக வெற்றி பெற்றுள்ளார்.  நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி வரிசையில் ராகுல்  அரசியல் வாழ்க்கை தற்போது  ஏறுமுகமாகவே உள்ளது.  இருந்தாலும், அவருடைய வாழ்க்கையில் சொல்லப்படாத சோகமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பிரியங்கா காந்தி திருமணம், குழந்தை , குட்டி என சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

ராகுல்

50 களில்  இருக்கும் ராகுல் காந்தி மட்டும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்கு அவருடைய காதல் தோல்வியும், காதலியை மறக்க முடியாத சோகமும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.  1998ல் ராகுல் காந்தி ஸ்பெயினில்  வெரோனிகா என்ற  பெண்ணை காதலிப்பதாகவும் இது குறித்த  புகைப்படங்களும் வெளியானது. இருவரும் கேரளாவில் தங்கியிருந்து அங்குள்ள இடங்களை சுற்றிப் பார்த்தனர். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அப்போது வைரலானது. ஆனால் அதன் பிறகு தகவலே இல்லை எனலாம்.  தற்போது இதற்கு பின்னணியாக அரசியலை சொல்கிறார்கள். அதாவது இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசியலின் எதிர்காலமாக இருந்தார். அப்போது அவர் இத்தாலியின் சோனியா காந்தியை காதலித்து இந்திய முறைப்படி திருமணம் செய்தார்.  அதன் பிறகு சோனியா காந்தி இந்திய பெண்ணாகவே மாறி இருந்தாலும் இத்தாலி நாட்டுக்காரரை திருமணம் செய்தவர் என்ற  களங்கம் ராஜீவ் காந்தியின் மீது இருந்து அழியவே இல்லை.

ராகுல் காந்தி
ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு அயல் நாட்டவர் எங்களை ஆள உரிமையில்லை என  சோனியாவை எதிர்க்கட்சிகள் அரசியலில் இருந்தே அவரை துரத்தின.  தன் இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு இத்தாலிக்கே சென்றுவிடலாம் என்ற அளவுக்கு சோனியாவுக்கு மோசமான நிலை. திருமணம் செய்து வந்த அரசியல் குடும்பத்தின் கௌரவத்தை காப்பாற்றவே இன்று வரை அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும்நிலையில் ராகுல் காந்தி ஒரு வெளிநாட்டுப் பெண்ணை மணந்து கொண்டு  மீண்டும் அந்த குடும்பத்தின் மீது  எதிர்மறையான  விமர்சனங்களுக்கு காரணமாகி விடக்கூடாது  என்பதில் உறுதியாக இருக்கிறார். அதே நேரத்தில் இதை மறந்து வேறு பெண்ணை மணக்கவும் ராகுலுக்கு விருப்பமில்லை என்கின்றனர் ராகுலின் நெருங்கிய நண்பர்கள்.  குடும்பத் தன்மானம் மற்றும் அரசியலுக்காக தன் காதலை தியாகம் செய்தவர் ராகுல் காந்தி என்கின்றன நெருக்கமான வட்டாரங்கள்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web