எனக்கு ரூ5 கோடி பணம் தேவையில்ல... ராகுல் டிராவிட் பிசிசிஐயிடம் மறுப்பு!

 
ராகுல் டிராவிட்
 


சர்வதேச டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வெற்றி பெற்றதில் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இதில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். 2007ல் 50  ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா  மிக மோசமாக  விளையாடி லீக் சுற்றோடு வெளியேறியது.

அப்போது இந்திய அணிக்குக் கேப்டனாக இருந்தது டிராவிட்தான். கேப்டனாக படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பயிற்சியாளராக கோப்பையை வென்றதும் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார்.  இந்நிலையில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ125 கோடி அறிவிக்கப்பட்டது. அதில் அணி வீரர்கள் மற்றும் டிராவிட் ஆகியோருக்கு தலா ரூ5 கோடி  என அறிவிக்கப்பட்டது.

புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் !! பிசிசிஐ!!

ஆனால் டிராவிட்டின் கீழ் இருந்த மற்ற பயிற்சியாளர்களுக்கு ரூ2.5 கோடி  மட்டும் பரிசாக அளிக்கப்பட்டது.ஆனால் இப்போது டிராவிட் தனக்கு மட்டும் ரூ5 கோடி  வேண்டாம் என்றும் மற்ற பயிற்சியாளர்களைப் போல தனக்கும் ரூ2.5 கோடி  பரிசு போதும் எனவும் பிசிசிஐயிடம் கூறியுள்ளதாக  தகவல் பரவி வருகிறது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web