நாப்கின்களில் ராகுல்காந்தி படம்... காங்கிரஸ் திட்டத்துக்கு கடும் கண்டனம்!

 
நாப்கின்களில் ராகுல்காந்தி படம்


 பீகார் மாநிலத்தில்  காங்கிரஸ் கட்சியின், மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் பிரியதர்ஷினி உதான் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்  மூலம் பெண்களுக்கு இலவச மாதவிடாய் நாப்கின்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாப்கின்களில் ராகுல்காந்தி படம்
இதனையடுத்து, காங்கிரஸ் பெண்களுக்கு வழங்கிய மாதவிடாய் நாப்கின்களின் அட்டையில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தியின் படம் அச்சிடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள  ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பெண்களின் முக்கிய பிரச்சனைகளை காங்கிரஸ் அரசியலாக்குகிறது.  பழமையான கட்சி தற்போது சித்தாந்த பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.  
பீகாரில்  இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெண் வாக்காளர்களைக் கவரும் நோக்கத்தோடு காங்கிரஸ் கட்சி இத்தகையச் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் விமர்சித்துள்ளார்.

நாப்கின்களில் ராகுல்காந்தி படம்

இதுகுறித்து, அவர்  "முதல்வர் நிதிஷ் குமார் பெண்களின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணிபுரிந்து  வருகின்றார். தேர்தலும் நடைபெறவுள்ளது. மரியாதையின் சின்னமாக பெண்கள் கருதப்படுவார்கள். ஆனால், நீங்கள் உங்களது அதிகாரத்தை வெளிகாட்ட நாப்கின்களில் உங்களது படத்தை அச்சிட்டுள்ளீர்கள்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.முன்னதாக பீகாரில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?