ராகுல்காந்தியின் தமிழக பயணம் திடீர் ரத்து! ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸார் அஞ்சலி!

 
ராஜீவ் காந்தி நினைவு தினம்: தந்தையின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார்

இன்று மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸார் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் திரளாக அஞ்சலி செலுத்தினார்கள். முன்பாக இன்றைய அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தமிழக பயணம் திடீரென காரணம் குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பாரத பிரதமர், ராஜிவ்காந்தியின் 32வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் மே 21ம் தேதி நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில்  தவிர்க்க முடியாத காரணங்களால் ராகுல் காந்தியின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கே.எஸ்.அழகிரி

இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி, ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில், அஞ்சலி நிகழ்ச்சி நடைப்பெறும் என்று அறிவித்திருந்தார்.

இன்று காலை 8 மணியளவில்  ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸார் ஒன்று திரண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதன் பின்னர் மருத்துவ முகாமினை கே.எஸ்.அழகிரி துவக்கி வைத்தார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தேசபக்தி பாடல்களை இசைக்குழுவினர் பாடிய பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை தொண்டர்கள் எடுத்துக் கொண்டனர்.

ராகுல் காந்தி

அதே போன்று இன்று காலை 10.30 மணியளவில் சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜிவ்காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள ராஜீவ்காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சிகளில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web