தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்து வெறி தீர்த்த ரயில்வே ஊழியர்.. அடுத்து நடந்த டிவிஸ்ட்!

 
பாம்பு

பீகாரின் அடர்ந்த வனப் பகுதியான ரஜௌலியில் புதிய ரயில் இருப்புப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான ரயில்வே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ரயில்வே அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் ஊழியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை 35 வயதான ரயில்வே ஊழியர் லோகர் என்பவர் பணி முடிந்து இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது விஷப்பாம்பு அவரை கடித்துள்ளார். உடனே லோகர், தன்னை கடித்த பாம்பை கையில் பிடித்து, அதே பாம்பை இரண்டு முறை கடித்தார். அந்த பகுதியில் பாம்பு கடித்தால், கடித்த பாம்பை பிடித்து, இரண்டு முறை கடித்தால், விஷம் நம் மீது படாமல், பாம்புக்கே திரும்பி விடும் என்பது, அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதை நினைவு கூர்ந்த ஊழியர் லோகரும் பதிலுக்கு தன்னை கடித்த பாம்பை கடித்தார்.

பாம்பு

ஆனால், இதைத் தொடர்ந்து லோகரின் உயிர் பிழைத்து அதிசயம் நடந்துள்ளது. சக ஊழியர்கள் லோகரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் விஷம் கலக்கவில்லை என்று கூறினர்.  முதலுதவி சிகிச்சையை ஏற்று மறுநாள் காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் லோகர் கடித்த பாம்பு உயிரிழந்து போனது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web