இன்று இந்த மாவட்டங்களில் கனமழை.. .வெதர்மேன் அலெர்ட்!

 
கன மழை

 தென் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.  தமிழகத்தில் ஒருசில இடங்களில் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல்  மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெயில் , மழை

மே 15ம் தேதி தமிழகத்தின் பல பகுதிகளில்  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல்  மற்றும் பலத்த காற்றுடன்   மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் .  
16  மற்றும் 17ம் தேதிகளில்  தமிழகத்தில் அநேக இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல்  மற்றும் பலத்த காற்றுடன் ( மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மழை

மே 18 மற்றும் 19ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து  வெதர்மேன் பிரதீப் ஜான்  ராமநாதபுரம் மற்றும் ஊட்டி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று தென்தமிழகத்தில் பரவலாக மழை பெய்யலாம்.  கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத்  தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web