30 நாட்களுக்கு மழை தொடரும்.. வெதர்மேன் அதிரடி ரிப்போர்ட்... !!

 
வெதர்மேன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக  மழை வெளுத்து வாங்கி வருகிறது. அத்துடன் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்   உருவாகியுள்ள   காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகிறது. இந்த காற்றழுத்தம் இன்று   மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  உருமாறும்.   அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை நவம்பர்  16ம் தேதி   வியாழக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.  மேலும் நவம்பர் 17ம் தேதி  வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிஸா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  

மழை நிலவரம் !! வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்!!


இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதி அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை நவம்பர்  16ம் தேதி  வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில்   சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற  பகுதிகளில் நேற்று பெய்த மழை குறித்து  வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில்   நேற்று தமிழ்நாட்டில் அதிக மழை பெய்த இடங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

வெதர்மேன்

சென்னையை நோக்கி சிறிய செல் வந்து கொண்டு இருக்கிறது. அதாவது சிறிய மிக மேகம் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சென்னையில் அடுத்த 30 நிமிடங்களில் கனமழை பெய்யலாம்.  பல இடங்களில் 10-15 நிமிடங்களுக்கு கண்டிப்பாக மழை பெய்யும் என   தெரிவித்துள்ளார்.  தனது https://tamilnaduweatherman.in/ பக்கத்தில்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ தமிழகத்தில்   தற்போது MJO நிலை 1 ல் இருந்து மழைக்கு சாதகமான நிலை 2க்கு செல்ல உள்ளது.  இந்த நிலை டிசம்பர் 2ம் வாரம் வரை இருக்கும். இதனால் அடுத்த 25- 30 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து உருவாகும் வாய்ப்புக்கள் மிக அதிகம்.  இந்த 30 நாட்கள்  அடுத்தடுத்து மழை  பெய்யலாம்.   இது போக இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் வாய்ப்புக்கள் அதிகம். சில பகுதிகளில் நவம்பர் 14 மற்றும் 15 ம் தேதிகளில் தீவிர மழை பெய்யக்கூடும். நாகை முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்கள் முழுவதும் தீவிர மழை பெய்யக்கூடும்.  நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், புதுச்சேரி , கடலூர், விழுப்புரம் கடற்கரை, செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் கடற்கரைப்பகுதிகள்  எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web