வைரல் வீடியோ... சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அருவி போல் கொட்டிய மழைநீர்!

 
மழை நீர்

அரசுப்பேருந்துகளில் மழை காலங்களில் பேருந்துக்குள்ளேயும் பல மழை பெய்வதை பலரும் காணலாம். அந்த வகையில் தற்போது ரயிலுக்குள்ளும் மழை சீசன் தொடங்கியுள்ளது. சதாப்தி எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு 4 மணிக்கு சென்றடையும்.

வழக்கம் போல் நேற்று சென்னையில் இருந்து கோவை நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் கோவை பீளமேடு அருகே வந்துக்கொண்டிருந்த போது கனமழை வெளுத்து வாங்கியது. சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் சி7 பெட்டியில் திடீரென மழை நீர் அருவி போல் கொட்டத் தொடங்கியது. ரயில் பெட்டியில் இருந்த மின்விளக்கின் மேற்புற பகுதியில் இருந்து தண்ணீர் கசிந்தது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் தூங்காமல் உட்கார்ந்தபடியே பயணம் செய்தனர். இது குறித்த  வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து  விசாரணை நடத்திய பின் ரயில்வே அதிகாரிகள்  'சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் மட்டுமே இந்த மழைநீரானது மின்விளக்கு அருகே இருந்து கசிந்துள்ளது.  சம்பந்தப்பட்ட ரயில் பெட்டியை சரி செய்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் இருந்து மீண்டும் சென்னை வந்ததும் குறிப்பிட்ட ரயில் பெட்டியின் பழுது விரைந்து சரிசெய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web