மசூதியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்புவது மத உணர்வுகளை புண்படுத்தாது... உயர்நீதிமன்றம் உத்தரவு!
மசூதிக்குள் "ஜெய் ஸ்ரீராம்" கோஷங்களை எழுப்பியதாக இருவர் மீது போலீசார் தொடுத்த குற்ற வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான ஒற்றை டிவிஷன் பெஞ்ச், இந்த உத்தரவை நிறைவேற்றும் போது, "ஜெய் ஸ்ரீராம்" கோஷங்களை எழுப்புவது எந்த சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் என்பது புரியவில்லை என்று குறிப்பிட்டது.

கர்நாடகா மாநிலத்தில் மசூதி ஒன்றில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 295Aன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 447 (குற்றவியல் அத்துமீறல்), 505 (பொதுக் கெடுபிடிகளுக்கு வழிவகுக்கும் அறிக்கைகள்), 506 (குற்றவியல் மிரட்டல்), 34 (பொது நோக்கம்) மற்றும் 295 ஏ (மத உணர்வுகளை சீர்குலைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட பகுதியில் இந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதாக வழக்கின் புகார்தாரர் தானே கூறியதாக பெஞ்ச் குறிப்பிட்டது. மனுதாரர்களுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதிப்பது சட்டத்தின் துஷ்பிரயோகமாகி விடும் என்று நீதிமன்ற பெஞ்ச் அடிக்கோடிட்டுக் கூறியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை குறிப்பிட்டு, ஐபிசியின் 295 ஏ பிரிவின் கீழ் எந்த ஒரு செயலும் குற்றமாக மாறாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கடந்த செப்டம்பர் 24, 2023 அன்று இரவு சுமார் 10.50 மணியளவில் மசூதிக்குள் நுழைந்து "ஜெய் ஸ்ரீராம்" கோஷங்களை எழுப்பியதாக காவல்துறை குற்றம் சாட்டியது. அவர்கள் மீது மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் எனக் காட்டப்பட்டு பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், மசூதிக்குள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புவது வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டாது என்று கூறி போலீசார் தொடுத்த குற்ற வழக்கை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
