ராஜேஷ் தாஸ் கோரிக்கை.. அதிரடியாக நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்!

 
ராஜேஷ் தாஸ்

செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பங்களாவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பலாமா என்று கேட்டார்.

ராஜேஷ் தாஸ்

இதற்கு ராஜேஷ் சம்மதித்த நிலையில், பீலா வெங்கடேசன் தரப்பில் மறுத்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பீலா வெங்கடேசன் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வீட்டின் மீது ராஜேஷ் தாஸுக்கு உரிமை இல்லாததால் மீண்டும் மின் இணைப்புக் கோர முடியாது என்றார்.

சென்னை உயர்நீதிமன்றம்

ராஜேஷ்தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், வீட்டுக் கடனை செலுத்தி வருவதாகவும், உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ராஜேஷ் தாஸின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web