ரஜினி – சுந்தர் சி பட விலகல் ... கிண்டல் மீம்ஸ்களுக்கு குஷ்பு நெத்தியடி பதில்!

 
குஷ்பூ

ரஜினி நடித்துவரும் தலைவன் 173 படத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி விலகிய சம்பவம் சமூக வலைதளங்களை சூடேற்றியுள்ளது. இந்த மாற்றத்தைப் பின்னணியாகக் கொண்டு ரஜினி மற்றும் சுந்தர் சியை குறிவைத்து பல்வேறு கேலி–கிண்டல்கள் அதிகரித்துள்ளன. அதிலும், நடிகை குஷ்புவை இணைத்து ஆபாசமான மீம்ஸ், கருத்துகள் பரவத் தொடங்கியுள்ளன.

குஷ்பூ

ரஜினியின் குத்துப் பாடல் காட்சிக்காக குஷ்பு வேண்டும் என கேட்டதால் சுந்தர் சி விலகியதாக சிலர் கிண்டலான பதிவுகள் செய்தனர். இந்த பதிவுகளில் ஒன்றுக்கு குஷ்பு நேரடியாக பதிலளித்துள்ளார். “இல்லை. உங்கள் வீட்டில் இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நினைத்து...” எனக் கடும் கிண்டலுடன் அவர் மறுமொழி அளித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி, அவரின் கூர்மையான பதிலை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

திடீரென ஏற்பட்ட இயக்குநர் மாற்றம் படத்தைச் சூழ்ந்த சர்ச்சையை மேலும் பெருக்கியுள்ளது. அதே நேரத்தில், குஷ்புவின் நேரடி பதில், தவறான மீம்ச்களுக்கு எதிரான தன்னம்பிக்கை நிலைப்பாட்டாகப் பாராட்டப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!