வைரல் வீடியோ: பேரன் வேத் கிருஷ்ணா பிறந்தநாள் விழாவில் ரஜினி குதூகலம்... சென்னை சூப்பர் கிங்ஸ் பின்னணியில் கொண்டாட்டம்!

 
ரஜினி
 


சமீபத்தில் சென்னையில் நடந்த தங்கள் பேரன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டனர் .  பிறந்தநாள் விழாவில், குழந்தைகளுடன் ரஜினிகாந்த் குதூகலத்துடன் குழந்தையாகவே மாறி கொண்டாட்டத்தில் பங்குபெற்றார். 
ரஜினியின் பேரன் வேத் கிருஷ்ணா கடந்த மே 6ம் தேதியன்று தனது 9வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பின்னணியில் பிறந்தநாள் கொண்டாட்ட பார்ட்டி அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், ரஜினி கலந்து கொண்ட வீடியோ வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


அந்த வீடியோவில், வேத் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டும் போது ரஜினிகாந்த் பின்னால் நிற்கிறார். ரஜினியும், அவரது மனைவியும் விருந்தினர்களையும் வேத்தின் நண்பர்களையும் வாழ்த்தி வரவேற்றனர்.
சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வேத் இந்திய ஜெர்சியை அணிந்திருக்கும் நிலையில், சௌந்தர்யா ரஜினி சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியை அணிந்திருந்தார். தனது இரண்டாவது மகன் வீரைச் சுமந்து செளந்தர்யா செல்வதையும் வீடியோவில் காண முடிகிறது. பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோக்களுடன் கூடிய ரிட்டர்ன் கிப்ட்களும் வழங்கப்பட்டன.

ரஜினி

தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை சௌந்தர்யா ரஜினி, அதிகாரப்பூர்வமாக பகிரவில்லை என்றாலும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் வெளியிட, அது வைரலாகி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

சௌந்தர்யா ரஜினிகாந்த், அவரது முன்னாள் கணவர் அஸ்வின் ராம்குமாரின் மகன் வேத் கிருஷ்ணா என்பதுகுறிப்பிடத்தக்கது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ல் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!