ரஜினியைக் கடுப்பாக்கிய கேள்வி... இமயமலை புறப்பட்டார் ரஜினி!
இன்று அதிகாலை நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக இமயமலை புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்திருந்த ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ஆன்மிகம் மிக முக்கியமான ஒன்று. சாந்தியும், சமாதானமும் கடவுள் நம்பிக்கை நிலவுவதற்கு ஆன்மிகம் தேவைப்படுகிறது. என்னுடைய முதல் இமயமலை பயணத்தில் புது அனுபவம் கிடைத்ததால் ஒவ்வொரு வருடமும் செல்கிறேன். இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் ஆன்மிகம் தேவைப்படுகிறது” என்றார்.
உங்கள் பயணத்தில் புதிய இந்தியா பிறக்குமா என கேட்டதற்கு, ‘வேண்டிக்கொள்கிறேன்’ என பதில் அளித்து சென்றார்.
மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா என்று கேட்டதற்கு, “அரசியல் கேள்விகள் வேண்டாமே” என்றார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை காப்புரிமை சர்ச்சையைக் குறித்து, “பாடல் பெரிதா? இசை பெரிதா?” என்று கேட்டதற்கு பத்திரிக்கையாளர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு சிரித்துக் கொண்டே, “அண்ணா, நோ கமெண்ட்ஸ்!” என்றார் ரஜினி.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
