எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு!

 
மாநிலங்களவை


மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக   ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பகல் 2 மணிக்கு உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாடாளுமன்றம் மக்களவை மாநிலங்களவை பாராளுமன்றம்


பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக 2 வது வாரமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை இன்றும் வழங்கியிருந்தனர். அவர்களின் கோரிக்கை வழக்கம்போல் நிராகரிக்கப்பட்ட நிலையில், அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.  

 பாராளுமன்றம்


மக்களவையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று தொடங்கும் விவாதத்துக்கு 16 மணிநேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றவுள்ளனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?