விஜயகாந்த் நினைவிடம் வந்தடைந்த பேரணி.. நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்ற தொண்டர்கள்!
போலீசார் அமைதி பேரணிக்கு தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறி தேமுதிக தொண்டர்கள் இன்று பேரணி புறப்பட்டனர். கோயம்பேடு சாலை முழுவதுமே விஜயகாந்த் ரசிகர்களாலும், தேமுதிக தொண்டர்களாலும் நிரம்பியது.
இன்று டிசம்பர் 28ம் தேதி தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடம் வரையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

முன்னதாக விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாகக் கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்து, இந்நிகழ்வில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்துக் கட்சித் தலைவா்களுக்கும் நேரில் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர்களும், அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், மாநிலத் தோ்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப் பேரணி புறப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இந்தப் பேரணியில் தேமுதிக நிா்வாகிகள், தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் பெருந்திரளாக பங்கேற்ற நிலையில் அமைதி பேரணி விஜயகாந்த் நினைவிடத்தை அடைந்தது. நினைவிடத்தில் விஜயகாந்த் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
