அன்புமணிக்கு ராமதாஸ் கெடு விதிப்பு... இன்று பதிலளிக்கிறார் அன்புமணி!
செப்.10ம் தேதிக்குள் பதிலளிக்க பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கும் கெடு விதித்திருக்கும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் விதித்துள்ள கெடுவுக்கு இன்று செப்.4ம் தேதி பதில் அளிப்பதாக அன்புமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 19ம் தேதி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக ஒழுங்கீனமாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் இதுகுறித்து ஆக.31க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த நோட்டீஸுக்கு அன்புமணி தரப்பில் எந்த பதிலும் இதுவரை அனுப்பப்படவில்லை.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக மாநில நிர்வாகக் குழு கூட்டம் கூடி நேற்று ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி, பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய ராமதாஸ், "அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது? என்பது பற்றியும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் வருகிற செப். 10 ஆம் தேதிக்குள் அவர் பதிலளிக்க வேண்டும். நிர்வாகக் குழு கூடி, மேலும் 10 நாள்கள் அவருக்கு கால அவகாசம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளது" என்றார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுடன் பேசிய அன்புமணி, "ராமதாஸ் அளித்த கெடுவுக்கு இன்று செப்டம்பர் 4ம் தேதி பதில் அளிக்கிறேன்" என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
