தொண்டர்கள் விரும்பும் வகையில், மக்களின் நலனுக்கு உகந்த கூட்டணியை உருவாக்குவேன்... ராமதாஸ் ஆவேசம்!
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 4,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தை, “காசு கொடுத்து கூட்டிய கூட்டமல்ல, தமிழக மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டம்” என ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தத் தீர்மானங்கள் பாமகவிற்கு மட்டுமல்ல, தமிழக மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் நோக்கம் கொண்டவை என்று அவர் வலியுறுத்தினார்.ராமதாஸ், தனது உரையில், “கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்துமே நீங்கள் தான். தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளுக்காகவும் நான் போராடினேன்,” என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிகரமான கூட்டணி அமைப்பதற்கு தொண்டர்கள் வழங்கிய முழு அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்துவேன் என்று உறுதியளித்தார். “தொண்டர்கள் விரும்பும் வகையில், மக்களின் நலனுக்கு உகந்த கூட்டணியை உருவாக்குவேன்,” எனக் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து அவர் ” தேர்தல் உத்திகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு மற்றும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கடுமையாக விமர்சித்த ராமதாஸ், “முதலமைச்சர் நினைத்தால், இருக்கின்ற தரவுகளை வைத்து ஒரு வாரத்தில் இட ஒதுக்கீடு வழங்க முடியும். ஆனால், தமிழக அரசு, இது மத்திய அரசின் பொறுப்பு என்று தட்டிக் கழிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வரை போராட்டத்தை தொடருவோம்,” என தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்தார். இது கூட்டத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் நிர்வாகிகள் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதிலும், ராமதாஸ் அவை குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
