17 வயசு தான்... ராப் பாடகர் வீடியோ எடுத்த போது தவறுதலாக துப்பாக்கியால் சுட்டு பலி!

 
ரைலோ ஹன்சோ
 

உலகம் முழுவதும் மீம்ஸ்கள் எடுத்து இணையதளங்களில் பதிவிடுவது இளசுகளிடையே ட்ரெண்டாகி வருகிறது. இதனால் பல நேரங்களில் அசம்பாவிதங்களும், விபரீதங்களும் நிகழ்ந்து விடுகின்றன. அந்த வரிசையில் ராப் இசை பாடகர் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது தவறுதலாக கையை அழுத்திவிட்டதால் அவர் உடனே சுடப்பட்டு உயிரிழந்தார். அமெரிக்காவில் விர்ஜினியாவில் வசித்து வருபவர் 17 வயதான ரைலோ ஹன்சோ.  

பிரபல ராப் பாடகரான இவர்   துப்பாக்கியுடன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக சுட்டு உயிரிழந்தார். அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே சர்வ சாதாரணமாக துப்பாக்கிகள் புழக்கம் இருந்து வருகிறது. இதுவே துப்பாக்கி கலாச்சாரத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி  2021ல் மட்டும் சுமார்  2590 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு  உயிரிழந்துள்ளனர்.  2019 ம் ஆண்டைக் காட்டிலும்  46 சதவீதம் அதிகம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  


 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!