ராப் இசை பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் !

 
வேடன்


 
கேரளாவில் வசித்து வரும்  பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி.  இளம்பெண் மருத்துவர் பாலியல் புகாரின் அடிப்படையில்  காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் படி, வேடன், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 2021 முதல் 2023 வரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இந்த வழக்கு, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார்தாரர், வேடனின் ரசிகையாக இருந்தவர், சமூக வலைதளங்கள்  மூலம் அவருடன் தொடர்பு கொண்டதாகவும், 2021ல் கோழிக்கோடு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் சந்திப்பில்  தாக்குதல் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். கேரளாவின் பல இடங்களிலும், வெளிமாநிலங்களிலும் இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின்  பிரிவின் கீழ் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உட்பட பல  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார்தாரரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.  

ஒடுக்குமுறையை வெறிகொண்டுத் தாக்கும் ராப்பர்... குறி வைக்கும் வலதுசாரிகள் :  யார் இந்த வேடன்? - complaint against rapper Vedan 2025
வேடனை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும்  தலைமறைவாக இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இந்த சம்பவம், கேரளாவில் சமூக வலைதளங்களில்  பரவலான விவாதத்தை தூண்டியுள்ளது. வேடனின் ரசிகர்கள் மத்தியில் இந்த புகார் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?