தூள் கிளப்பும் மாமன்னன்... நடிகர் வடிவேலு குரலில் ராசாக்கண்ணு பாடல் வெளியானது!

 
வடிவேலு உதயநிதி

மாமன்னன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில்  வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று படத்தின் முதல் பாடலான ‘ராசாகண்ணு’ பாடல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ளார். பாடலை கேட்ட பலரும் ஆஹா சூப்பரா இருக்கே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் மாமன்னன்.  மாரி செல்வராஜ் தமிழில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் . இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின்  ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வில்லனாக மலையாள நடிகர் பஹத் பாசிலும், முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலுவும் நடித்துள்ளார்.


உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி விட்டார் என்பதால் இதுவே தனது கடைசி படமாக அறிவித்துள்ளார் . இதனால் மிக பிரம்மாண்டமாக தயாரிப்பு பணிகளும், வெளியீடும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜூன் மாதம் பக்ரீத் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில்   அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.மாமன்னன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வடிவேலு ஒரு பாடலை பாடி உள்ளார். இந்த பாடல் ரெக்கார்டிங்கின் போது எடுத்த புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.


அதைப்பார்த்த ரசிகர்கள் அந்தப் பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ரசிகர்களுக்காக தற்போது அதிரடியான அப்டேட்டை மாமன்னன் படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி மாமன்னன் படத்தின் முதல் பாடலாக வடிவேலு பாடிய பாடலை தான் வெளியிட உள்ளனர். இப்பாடல் இன்று மே 19ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வடிவேலு பாடிய முதல் பாடல் இது என்பதால் இதனை கேட்க ரசிகர்கள் ஆவலோடு காத்து கிடக்கின்றனர். மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web