தேசிய விருது வேண்டாம்… ரசிகர் பாராட்டே போதும்: ரஷ்மிகா மந்தனா
'தி கேர்ள்பிரண்ட்' படத்தில் நடித்த ரஷ்மிகா மந்தனாவின் நடிப்பு ரசிகர்களிடமும், திரைப்பட உலகினரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. ராகுல் ரவீந்திரன் இயக்கிய இந்தப் படம் பெண்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். நவம்பர் 7ஆம் தேதி வெளியான இப்படத்தில் அனு எம்மானுவேல், தீக்ஷித் ஷெட்டி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ரஷ்மிகாவின் நடிப்பிற்காக தேசிய விருது வழங்க வேண்டுமென தயாரிப்பாளர்கள் முதல் இசையமைப்பாளர்கள் வரை பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தினமும் சமூக வலைதளங்களில் அவரது நடிப்பு தொடர்பான பாராட்டுகள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஷ்மிகா, “படத்தின் நோக்கத்தை நீங்கள் உணர்ந்தது எனக்குப் பெரிய சந்தோஷம். நீங்கள் படத்துடன் ஒன்றிப்போய் ரசித்ததே எனக்கே பெரிய விருது. தேசிய விருது எனக்குத் தேவையில்லை. நீங்கள் படத்தை உணர்ந்து ரசிப்பதுதான் எனக்குப் பெருமை” என கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
