கல்லூரி உணவகத்தில் சட்னியில் நீச்சலடிக்கும் எலி... பகீர் வீடியோ!

 
சட்னியில் எலி


உணவில் கலப்படங்கள் அதிகரித்து பல நேரங்களில் சாப்பிடுபவர்கள் விபரீதங்களை சந்தித்து வருவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள சுல்தான்பூர் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கே அமைந்திருக்கும்  மெஸ்ஸில் மாணவர்களுக்கான உணவு தயாரிக்கப்படும் பெரிய பாத்திரத்தில் சட்னி தயாரித்தனர். அதில்  உயிருடன் சிறிய எலி  ஓடிக்கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில்  பலரும் ஒரு பாதுகாப்பாக கூட உணவை உங்களால் தயார் செய்ய முடியாதா? என  தங்களுடைய கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  இத்தகவல்களின்படி, விடுதி ஊழியர்கள் இன்று ஜூலை 9ம் தேதி செவ்வாய்கிழமை காலை உணவாக கடலை சட்னியுடன் இட்லி சமைத்து கொண்டு இருந்தனர். அச்சமயம் சட்னியை திறந்து வைத்து சமைத்த நிலையில்  உயிருள்ள எலி உள்ளே விழுந்தது தெரிய வந்துள்ளது. சட்னி பாத்திரத்தை மாணவர்கள் கவனித்தபோது அதில் எதோ நீந்துவது போல தெரியவந்துள்ளது.


அதில் எலி நீச்சல் போட்டு கொண்டு இருந்தது.  இதனை கவனித்த மாணவர்கள், உடனடியாக தங்களுடைய போன்களை எடுத்து வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.  சாப்பிடும் உணவில் எலி கிடைத்ததை பார்த்த கல்லூரி மாணவர்கள் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில், அவர்களை சமாதானப்படுத்த விடுதி நிர்வாகம் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   மாணவர்களும், பிஆர்எஸ்வி ஆர்வலர்களும் இந்தப் பிரச்னையில் போராட்டத்துக்குத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கின்றன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web