இளைஞர்களுக்கு ரத்தன் டாடா சொன்ன எதிர்காலத்திற்கான முக்கிய மேற்கொள்கள்!
உடல்நலக் குறைவால் நேற்றிரவு தொழிலதிபர் ரத்தன் டாடா காலமான நிலையில், ஒட்டுமொத்த தேச மக்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இளைஞர்களுக்காக வாழ்க்கையில் உயர ரத்தன் டாடா தனது அனுபவங்களில் இருந்து கூறிய மேற்கோள்கள் வைரலாகி வருகின்றன.
அவர் எப்போதுமே இந்திய மக்களின் மீது, குறிப்பாக இந்திய இளைஞர்கள் மீது அபரிமிதமான, அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.
உலகளாவிய வணிக நிலப்பரப்பில் டாடாவின் தாக்கத்தை மிகைப்படுத்த முடியாது என்றாலும் அவரது வேர் எப்போதும் இந்தியாவிலேயே புதையுண்டிருந்தது. இந்தியா தேசத்தை அத்தனை நேசித்தார். இந்திய இளைஞர்கள் வாழ்வில் உயரவேண்டும், மேன்மையடைய வேண்டும் என்று சிந்தித்தார்.

இந்நிலையில், அவரது வாழ்வியல் அனுபவங்களில் இருந்து இந்திய இளைஞர்களுக்கு அவர் கூறிய வார்த்தைகள் என்றென்றும் எதிர்கால வாழ்க்கைக்கு உரமாக இருக்கும்.
"பழைய ஆடைகளை அணிவதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் திறமையை உங்கள் ஆடைகள் தீர்மானிப்பதில்லை"
"ஏழ்மையான நண்பர்களைப் பற்றி கூச்சப்படாதீர்கள் நட்பில் ஏற்றத்தாழ்வுகள் என்பது கிடையாது."
"வயதான பெற்றோர்களைக் குறித்து வெட்கப்படாதீர்கள். நீங்கள் இந்த நிலைக்கு உயர்ந்து இங்கே நிற்பதற்கு அவர்கள் தான் காரணம்."
"எத்தனை உயரம் சென்றாலும் எளிமையாக இருங்கள். ஏனெனில் வெற்றி தோற்றத்தை வைத்து மதிப்பிடப்படுவதில்லை."
"உங்களுக்கு வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்காதீர்கள், உங்கள் சொந்த வாய்ப்புகளை உருவாக்குங்கள்."
"வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடக்க வேண்டும். ஆனால் வெகுதூரம் நடக்க வேண்டும் என்றால் ஒன்றாக நடக்க வேண்டும்."
"அதிகாரம் செல்வம் ஆகிய இரண்டும் எனது முக்கிய பங்குகள் கிடையாது"

"இரும்பை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அதன் சொந்த துருவே அதனை அழிக்கும். அதேபோல், யாராலும் ஒரு நபரை அழிக்க முடியாது, ஆனால் அவர்களின் சொந்த மனநிலையால் முடியும்."
"மக்கள் உங்கள் மீது எறியும் கற்களை எடுத்து ஒரு கோட்டையை கட்ட அவற்றைப் பயன்படுத்துங்கள்."
"மிகவும் வெற்றி பெற்றவர்களை நான் பாராட்டுகிறேன். ஆனால் அந்த வெற்றியை அதிக இரக்கமின்மையால் அடைந்திருந்தால், நான் அந்த நபரை குறைவாகப் பாராட்டுவேன்."
"நாம் தொடர்ந்து பயணிக்க வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் மிகவும் முக்கியம். ஈசிஜியில் கூட நேர் கோடு இருந்தால் நாம் உயிருடன் இருக்க மாட்டோம். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் தான் உயிர் இருக்கும்."
"பொருளாதாரம் ஒன்றும் இல்லை என்பதை ஒரு நாள் நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். நீங்கள் விரும்பும் மக்களின் நல்வாழ்வுதான் முக்கியம்."
"சிறந்த தலைவர்கள், தங்களை விட புத்திசாலிகள் மற்றும் உதவியாளர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் சுற்றி வருவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்."
"வேலை-வாழ்க்கை சமநிலையை நான் நம்பவில்லை. வேலை-வாழ்க்கை ஒருங்கிணைப்பை நான் நம்புகிறேன். உங்கள் வேலையையும் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாகவும், நிறைவாகவும் ஆக்குங்கள். மேலும் அவை ஒன்றையொன்று பூர்த்தி செய்யும்."
"மிகப்பெரிய ரிஸ்க் என்பது எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பது தான். வேகமாக மாறிவரும் உலகில், தோல்விக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரே உத்தி ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான்."

"சவால்களை எதிர்கொள்வதில் விடாமுயற்சியுடன் இருங்கள், ஏனென்றால் அவை வெற்றியின் ஒவ்வொரு கட்டமாகும்."
"மற்றவர்களுடனான உங்கள் தொடர்புகளில் கருணை, பச்சாதாபம் மற்றும் இரக்கத்தின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்."
"உனக்கு எப்போதுமே வசதியான வாழ்க்கை இருக்காது. உலகின் எல்லா பிரச்சனைகளையும் எப்போதும் தீர்க்க முடியாமல் போகலாம். ஆனால் உன்னுடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடாதே. ஏனென்றால் தைரியம் தொற்றக்கூடியது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது"
"தலைமை என்பது பொறுப்பை ஏற்றுக்கொள்வது. காரணங்களை கூறுவது அல்ல"
"இந்தியாவின் எதிர்காலத் திறனைப் பற்றி நான் எப்போதும் மிகுந்த நம்பிக்கையுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் இருக்கிறேன். இது ஒரு சிறந்த ஆற்றல் கொண்ட நாடு என்று நான் நினைக்கிறேன்."
"மக்கள் இன்னும் தாங்கள் படிப்பதை உண்மை என்று நம்புகிறார்கள்."
"சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுத்து பின்னர் அவற்றைச் சரியாகச் செய்கிறேன்."
"பெரிய தாக்கத்த ஏற்படுத்திய ஒருவரை நான் பின்தொடர்ந்தேன். அவர் எனக்கு ஒரு பெரிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றார், நான் அந்த மரபைப் பின்பற்ற முயற்சித்தேன்."
"நான் நிச்சயமாக டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் பங்குகளை விற்க மாட்டேன் , நான் எவ்வளவு விமர்சித்தாலும் விற்க மாட்டேன்."
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
