வரத்து அதிகரிப்பு... சரேலென குறையத் தொடங்கியது தக்காளி விலை.... பொதுமக்கள் மகிழ்ச்சி!

 
மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!
 கோயம்பேடு சந்தையில் இன்று முருங்கைக்காய் கிலோ ரூ.100, அவரைக்காய் ரூ.90 என விலை உயர்ந்து விற்பனையானது.

கோயம்பேடு சந்தையில் கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்திருந்த தக்காளி விலை, இன்று வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூ.46 ஆக குறைந்துள்ளது. அதேசமயம் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்டது. இதேபோன்று அவரைக்கால் கடந்த வாரம் ரூ.70-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.90 ஆக உயர்ந்துள்ளது.  
மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.60,  கேரட் ரூ.50, பாகற்காய் ரூ.40, கத்தரிக்காய், சாம்பார் வெங்காயம், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, நூக்கல் தலா ரூ.30, பீட்ரூட் ரூ.25, வெண்டைக்காய் ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.18, புடலங்காய் ரூ.15 என விற்கப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய், அவரைக்காய் விலை உயர்ந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, "கோயம்பேடு சந்தைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் போன்ற பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வருகிறது. தற்போது வரத்து குறைந்திருப்பதால், அதன் விலை உயர்ந்துள்ளது. இதேபோன்று அவரைக்காய் வரத்து குறைந்திருப்பதால், அதன் விலையும் உயர்ந்துள்ளது. இவற்றின் விலை இன்னும் ஒரு மாதத்துக்கு உயர்ந்தே இருக்க வாய்ப்புள்ளது" என்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web