11 வகை ஓட்டுனர் உரிமம்... 73 வயசு ராதாமணி தான் என் மோட்டிவேஷன்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திரா ட்வீட்!

 
ராதாமணி

 ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து பல தகவல்களை பதிவிட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வார்.  
இவரின் சிங்கிள் ட்வீட் மூலம், டீக்கடை வியாபாரிகள் முதல் ஆட்டோ ஓட்டுநர்கள், மாணவர்கள் வரை பிரபலமானவர்கள் ஏராளம்.  அந்த வகையில்  கேரளாவைச் சேர்ந்த 73 வயது பாட்டியை ட்வீட் செய்துள்ளார். இந்த பாட்டி  ராதாமணி கொச்சியில் டிரைவிங் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்  LMV, HMV, Two wheeler, Badges என இவரிடம் மொத்தம் 11 வகையான டிரைவிங் லைசென்ஸ்கள் இருக்கின்றன.இந்தியாவிலேயே 11 வகையான வாகனங்களின் டிரைவிங் லைசென்ஸ் ஹோல்டராக இருப்பவர் - ராதாமணி ஒருவர்தான் என்பதுதான்  ஆச்சரியமான தகவல்.  ட்விட்டரில் இவரின் புகைப்படத்தைப் பதிவிட்டு, வயது என்பது வெறும் நம்பர்தான்; வாழ்க்கையின் மீது தீராப்பசி கொண்டிருக்கும் ராதாமணிக்கு வயது தடையே இல்லை.  

இவர்தான் எனது மண்டே மோட்டிவேஷன்' என  தனது எக்ஸ் வலைளத்தில் போஸ்ட் செய்துள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகியுள்ளது.  ராதாமணி 1981 லிருந்து  வாகனங்கள் ஓட்டி வருகிறார்.  கொச்சியில் `A to Z' என்று ஒரு வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 1970ல் தனது கணவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த டிரைவிங் ஸ்கூலை 2004ல் தனது கணவரின் மறைவுக்கு  பிறகு ஒற்றைப் பெண்மணியாக நடத்தி வருகிறார்.  இதன் மூலம்  தன்னைப்போலவே பெண்களுக்கு வாகனங்களை ஓட்டக் கற்றும் தருகிறாராம்.  ஹெவி வெஹிக்கிள்கள் ஓட்டுவதில்  ராதாமணிக்கு ரொம்பவே இஷ்டம் தான். சாதாரண கார்களை காட்டிலும்  JCB, கிரேன்கள், எக்ஸ்கவேட்டர்கள், புல்டோஸர்கள், ஃபோர்க்லிஃப்ட்கள், ஆட்டோக்கள், ரோடுரோலர்கள்  ஓட்டுவதுதான் மிகவும் பிடிக்கும் என்கிறார்.
இவர் ஒன்று விடாமல் அத்தனை வாகனங்களையும் ஓட்டுவதற்கு, முறையான பயிற்சி பெற்று, அதற்கான ஓட்டுநர் உரிமங்களையும் வைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.   1988 லேயே  லாரி ஓட்டுவதற்கான HMV க்கான ஹெவி வெகிக்கிள் லைசென்ஸ் வாங்கியவர். இதற்கு தனது கணவர் தான் தூண்டுகோலாகவும், பயற்சியாளராகவும் இருந்துள்ளதாக நெகிழ்ச்சி அடைகிறார்  ராதாமணி.
 ராதாமணி
இந்தியாவைப் பொறுத்தவரை   கார்களுக்கான (LMV), பைக்குகளுக்கான (MCWG), மீடியம் குட் ஹெவிக்கிள்ஸ்க்கான (MGV), லாரி, ட்ரக் போன்ற பெரிய வாகனங்களுக்கான (HMV), பெரிய 12 வீல்கள் கொண்ட சரக்கு வாகனங்களுக்கான ஹெவி குட் மோட்டார் வெஹிக்கிள் (HGMV), பயணிகளை ஏற்றுச் செல்லும் பேருந்துகளை ஓட்டும் (HPMV or HTV), ஹெவி ட்ரான்ஸ்போர்ட் வெஹிக்கிள், ட்ரெய்லர்களுக்கான Trailer என்று பலவிதமான உரிமங்கள் நடைமுறையில் உள்ளன.  இந்தியாவில்  11விதமான வாகனங்களை ஓட்ட உரிமம் வாங்கியிருப்பவர்  ராதாமணிப் பாட்டி மட்டும் தான். இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்  குவிந்து வருகின்றன.
டிரைவிங் ஏரியாவில் பிரபலமாக இருந்த ராதாமணி  ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டுக்குப் பிறகு இன்னும் பிரபலம் ஆகி வருகிறார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web